தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள எல்.முருகன், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசும் நல்ல முடிவை எடுக்க வேண்டும், உடனடியாக 12 ஆம் வகுப்பு தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.