தமிழ்நாடு

கூட்டுறவு தேர்தல் போது கட்சியினரிடையே வாக்குவாதம்

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடையாளூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தேர்தல்

நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்று வந்தது. மொத்தம் ஆயிரத்து 900 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ள இந்த வங்கியில் 11 பேரை தேர்ந்தெடுக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 33 பேர் போட்டியிட்டனர்.இந்த நிலையில் திடீரென அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், உடனடியாக கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்