ராமநாதபுரத்தில் தனியார் மஹால் ஒன்றில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவி ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் மூலம் பல மோசடிகள் செய்து ஏமாற்றியதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் விழா மேடையில் ஏறி ஒலி பெருக்கியில் தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், நிகழ்ச்சிக்கு வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் நாலா பக்கமும் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.