தமிழ்நாடு

பொங்கல் விழாவில் இரு பிரிவினரிடையே மோதல், பெண்ணிற்கு கத்திக்குத்து

சிவகங்கை அருகே விளையாட்டு போட்டியின் போது இருத்தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை யொட்டி பொன்னாங்குளம் கிராமத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வள்ளி என்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. அதேபோல் மூர்த்தி என்பவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி மற்றொரு தரப்பினர் சிவகங்கை- மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்