தமிழ்நாடு

கொடிய மது பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்த சிவில் இன்ஜினியர் திடீர் மரணம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகேயுள்ள கூடமலை கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அறிவழகன் என்பவர் மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை உறவினர்கள் ஓமலூர் அருகே உள்ள மோலாண்டிபட்டியில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், அறிவழகனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிவழகன் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்