நாகை நகர காவல் நிலையம் முன்பு, திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், தமிழக அரசு, காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக கலவரத் தடுப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதிவிரைவு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கும்பகோணம், மகாமகம் குளம் அருகே குவிந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில், சி.ஏ.ஏவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்ணாரப்பேட்டை தடியடி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர்.