விழுப்புரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.