தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நுங்கம்பாக்கம்

இதேபோல், சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு திராவிட கழக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணியினர், போராட்டத்தில் ஈடுபபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், சாலையில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர்

திருச்சி திருவெறும்பூரில் எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்