சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் இன்றி பாதுகாப்பாக உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அந்த ஏரியின் கரையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது.
அதில், ஏரியின் புவியியல் அமைப்பு மற்றும் நிலத்தடி நீரோட்டமே தற்போதைய விரிசல்களுக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தற்காலிகமாக சிமெண்ட் கலவை மற்றும் தார்பாலின் கொண்டு மூடப்பட்டு வருகின்றன என்றும், (card-5)உயர் மட்ட தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து உடனடி சீரமைப்புப் பணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரைப்படி 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளுக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.