இன்றைக்கு இவரை தெரியாத தமிழர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு பிரபலமடைந்திருக்கிறார். ஜிமிக்கி கம்மல் ஷெரில், பிரியா வாரியர், தென்கொரிய நடிகை சூயூ என தேடி தேடி பார்த்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இன்று இந்த பெண்ணையும் தேடுகிறார்கள்.. ரசிக்க மட்டுமல்ல.. சிரிக்கவும் தான்..எவ்வளவு தான் விமர்சிக்கப்பட்டாலும், தன் போக்கில் இருந்து சற்றும் வழுவாமல் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு இணைய தலைமுறையின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்..