தமிழ்நாடு

களைகட்டிய சித்திரை திருநாள் விழா - தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு

தந்தி டிவி

சித்திரை திருநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்ம உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில், சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேய சுவாமிக்கு ஆயிரத்து எட்டு லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு ஆயிரத்து எட்டு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி