தமிழ்நாடு

9 மாத ஆண் குழந்தை விற்கப்பட்ட விவகாரம் - பெற்றோர், வளர்ப்பு தாயிடம் போலீசார் விசாரணை

மதுரையில் 9 மாத ஆண் குழந்தை விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பெற்றோர் மற்றும் வளர்ப்பு தாயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
மதுரை செல்லூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராபர்ட் என்பவரின் இரண்டாவது மனைவி மேரிக்கு பிறந்த 9 மாத ஆண் குழந்தையை , வெளிநாட்டில் பணியாற்றும் ஷாஜகான்- நாகூர் அம்மாள் தம்பதிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக இடைத்தரகர் மூலம் அதிக பணம் கொடுத்ததாகவும், பின்னாளில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக 20 ரூபாய் பத்திரத்தில் இருதரப்பினரும் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டதாகவும் தெரிகிறது. தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பினர் போலீசார் உதவியோடு சென்று நேரடியாக விசாரணை நடத்தியதில் குழந்தை விற்கப்பட்டது உறுதியானது.

அந்த குழந்தையை மீட்டு கருமாத்தூரில் உள்ள காப்பாகத்தில் பாதுகாக்க சைல்ட் லைன் அமைப்பினர் அறிவுறுத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக நாகூர் அம்மாள், ராபர்ட்,மேரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்