தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயதான ஆண் குழந்தையை கடத்திய குற்றவாளியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் -நீலாவதி தம்பதியர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களின் 3 வயது மகன் சோம்நாத் உடனிருந்த நிலையில் இரவில் ரயில் நிலையத்தில் 3 பேரும் தூங்கியுள்ளனர். அதிகாலை கண்விழித்துப் பார்த்தபோது குழந்தையை காணாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையை கடத்திச் சென்றவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதோடு தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை குழந்தை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் இதேபோல் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றார். இதுவரை இந்த வழக்கிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது...

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்