தமிழ்நாடு

பெற்றோரின் கண் எதிரே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

கடலூரில் பெற்றோரின் கண் எதிரே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கடலூர் அடுத்த உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் புதைப்பதற்கான தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் காணப்பட்டது. இதில் கருணாகரன் நிலை தடுமாறியதால் அவரது மனைவி கையில் வைத்திருந்த ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்துள்ளது. இந்நிலையில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் குழந்தை சிக்கி உயிரிழந்துள்ளது. குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகும் பள்ளம் மூடப்படாததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பின்னர் உடனடியாக சாலையோர தோண்டப்பட்ட பள்ளம் விரைவாக மூடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்