தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - பெற்றோர் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கை வைத்த ஒன்றரை வயது குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கை வைத்த ஒன்றரை வயது குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் -பவித்ரா தம்பதிக்கு, ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்த பவித்ரா 4 நாட்களாக அங்கேயே தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பவித்ரா குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் கருவியை, குடத்தில் பொருத்தி வைத்து வெண்ணிர் காயவைத்துள்ளார். அப்போது, விளையாடிக்கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தை அனன்யா தவறுதலாக தண்ணீரில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது. குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் கவனக்குறைவால் திறந்தவெளியில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி குழந்தையின் உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’