தமிழ்நாடு

Chennai | Singapenn | குழந்தைகளை வைத்து யாசகம் | களத்தில் இறங்கி மீட்ட சிங்கப்பெண்கள்

குழந்தைகளை வைத்து யாசகம் | களத்தில் இறங்கி மீட்ட சிங்கப்பெண்கள்

thanthitv

Chennai | Singapenn | குழந்தைகளை வைத்து யாசகம் | தப்பியோட முயன்ற வடமாநில பெண்கள் | களத்தில் இறங்கி மீட்ட சிங்கப்பெண்கள் #chennai #women #kids #singapenn #thanthitv யாசகம் பெற்றவர்களை மீட்டு மறுவாழ்வு மையம் அனுப்பிய சிங்கப்பெண் படை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக யாசகம் பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை சிங்கப்பெண் சிறப்பு படையினர் மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.... காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வட மாநிலத்தவர்கள் தொடர்ச்சியாக யாசகம் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார் காவலர்கள் அவர்களை எச்சரித்து, செங்கல்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப முயன்றனர். அப்போது காவலர்களைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற வடமாநிலத்தவர்கள், கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும், கிளாம்பாக்கம் போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெண் காவலர்கள் பத்திரமாக வேனில் ஏற்றி செங்கல்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். சிங்கப்பெண் சிறப்பு படையினரின் துணிச்சலான செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

BREAKING || வருவாய் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு

Breaking | Highcourt | Madurai | "இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடம் கிடையாது"

BREAKING || பரபரப்பை கிளப்பிய அபுதாபி நீட் தேர்வு மையம் - திடீர் திருப்பமாக வந்த தகவல்

CM Vijay | Vandalur | "CM விஜய் பிறந்த‌நாளை முன்னிட்டு.." வெளியான முக்கிய அறிவிப்பு

Drugs Banned | 16 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி