தமிழ்நாடு

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

தந்தி டிவி

சுற்றுப்புற சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை, தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக " தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019 " தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதனை, சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். முதல் பிரதியை, அமைச்சர்கள் எம். சி. சம்பத், எம். ஆர். விஜயபாஸ்கர் இருவரும் பெற்றுக்கொண்டனர்.

அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு 2022 ம் ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் .

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் , மின்னேற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தும், 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படும். என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி