மத்திய அரசின் 2020-ஆம் ஆண்டு வரைவு மின்சார சட்டத் திருத்தம், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்து உள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாநில அரசுகளே நேரடியாக செலுத்துதல் போன்றவை மாநில நலனுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருவதால், மின்சார சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் மேற்கொள்ளக்கூடாது என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.