தமிழ்நாடு

"தமிழக அரசுக்கு விருது மழை பொழிந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசுக்கு, விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர், அரசுமுறை பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம், லண்டனில் உள்ள புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கூறினார். அரசின் கொள்கைகள், திட்டங்களுக்காக, விருது மழை பொழிந்து வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டு, தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக கூறினார். விரைவில் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்