கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 2 ஆயிரத்து 834 மருத்துவ பணியாளர்களை நியமித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பணியில் இல்லாத 574 முதுகலை மாணவர்கள், 665 மருத்துவர்கள், 365 ஆய்வக உதவியாளர்கள், ஆயிரத்து 230 பல்நோக்கு சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 834 பேர் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் வேலைப்பளுவை முழுமையாக குறைக்க உதவுவதோடு, கொரோனா சிகிச்சைகளை மேம்படுத்துவதாகவும் அமையும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.