தமிழ்நாடு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எம்-3 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவனத்திடமிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்