ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் . 74 வயதானஅவர் ,ஆசியாவின் மிகப் பெரிய சிறையான தில்லி திகார் சிறையில் செப்டம்பர் 6-ஆம் தேதி அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்து விட்டது .
இந்நிலையில், திகார் சிறை வளாகத்தில் உள்ள 7 ஆம் எண் சிறையில் 15-க்கு 10-க்கு அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஓய்வுநேரத்தில் புத்தகங்களையும், நாளேடுகளையும் வாசித்து வருவதுடன். நாட்குறிப்பையும் எழுதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் சக கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் அவர் வழங்கி வருவதாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறை அதிகாரிகளுடனும், காவலர்களுடன் அவர் , எளிமையாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கைதிகள், சிறை அதிகாரிகளுடனான உரையாடலின்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து கவலை தெரிவிக்கும் அவரது வாதங்களும் கேட்போரை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகு வலி, எடை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்தை, திகார் சிறையில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவரை பரிசோதித்து, கவனித்து கொள்கின்றனர்.