சிதம்பரம் அருகே கன்னங்குடி கிராமத்தில், பாலம் வசதி இல்லாததால் முதலைகள் நிறைந்த வாய்க்காலைப் பிளாஸ்டிக் மிதவைகள் மூலம் விவசாயிகள் கடக்கும் நிலை உள்ளது... பாசிமுத்தன் ஓடையைக் கடந்துதான் தங்களது விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகப் பாலம் அமைக்கக் கோரி விடுத்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்... நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாக இங்கு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.