தமிழ்நாடு

Chidambaram Temple | தமிழக அரசு vs தில்லை தீட்சிதர்கள்.. சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு!

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையின் உள்ள நவ துவாரங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையின் உள்ள நவ துவாரங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனகசபையில் உள்ள நவ துவாரங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து, 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Sonam Wangchuk | Delhi protest | சோனம் வாங்சுக் வெளியிட்ட திடீர் வீடியோ

CBCID | தமிழகத்தையே உலுக்கிய சபரிவர்மன் மரண வழக்கு.. நேரில் இறங்கிய CBCID SP ஷாஜிதா

Sagayam IAS | சகாயம் IAS போட்ட வழக்கு..தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

DMK MK Stalin | வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக ஸ்டாலின் மீது வழக்கு

Chennai HC | "இதை ஏற்க முடியாது" நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு