தொடர் மழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளம் நிரம்பியது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் சி நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து சிவகங்கை குளம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. தண்ணீர் நிரம்பிய குளத்தை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீர் உட்பட அனைத்து தண்ணீரும் சிவகங்கை குளத்திற்கு வரும் வகையில் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.