தமிழ்நாடு

Chidambaram | தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய முதலை - இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Chidambaram | தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய முதலை - இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

thanthitv

Chidambaram | தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய முதலை - அஞ்சி ஓடாமல் இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் சிதம்பரம் தில்லை அம்மன் ஓடை வெளிவட்ட சாலைப் பகுதியில், தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐந்து அடி நீள முதலைக்குட்டியை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். சுமார் 80 கிலோ எடை கொண்ட அந்த முதலைக்குட்டிக்குத் தண்ணீர் ஊற்றி, அதன் உயிர் போகாதவாறு பாதுகாத்த இளைஞர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காயமடைந்த முதலைக்குட்டியைச் சிகிச்சைக்காகப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். சாலையிலிருந்த முதலையைக் கண்டு அஞ்சி ஓடாமல், மனிதநேயத்துடன் இளைஞர்கள் அதனைக் காப்பாற்றியது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா