தமிழ்நாடு

தங்கம் வென்று சென்னையில் கால் பதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி - பெருமை பொங்க பெற்றோர் சொன்ன விஷயம்

தந்தி டிவி

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்று சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் பங்கேற்ற, அக்கா தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் சென்னைக்கு திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இரு பிரிவுகளிலும் வரலாற்று சாதனையாக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக மகளிர் அணி வீராங்கனை வைஷாலி தெரிவித்தார். இதே போன்று, தந்தி டிவிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ஆடவர் அணி வீர‌ர் பிரக்ஞானந்தா, சென்னை ஒலிம்பியாட்டில் கிடைத்த அனுபவத்தால்தான், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்த‌தாக பெருமிதம் என்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை