தமிழ்நாடு

``படிக்கும்போதே ரூ.1 லட்சம்..முதலாம் ஆண்டு சென்னையில்.. 2ம் ஆண்டு சிங்கப்பூர்.. 3ம் ஆண்டு லண்டனில்''

தந்தி டிவி

`படிக்கும்போதே மாதம் ரூ.1 லட்சம்.. முதலாம் ஆண்டு சென்னையில்.. 2ம் ஆண்டு சிங்கப்பூர்.. 3ம் ஆண்டு லண்டனில்''- சென்னைஸ் அமிர்தா

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை, சென்னையில் ஓராண்டும், வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளும் படிக்கும் வகையில், புதிய படிப்பை சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பர்மிங்காம் கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் ஓராண்டு டிப்ளமோ படிக்கும் மாணவர்கள், சிங்கப்பூரில் உள்ள பர்மிங்காம் அகாடமியில் அட்வான்ஸ் டிப்ளமோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படிக்க முடியும். ஒராண்டு கால படிப்பில், 6 மாதங்கள், மாதம் ஒரு லட்ச ரூபாயுடன் பயிற்சியும் அளிக்கப்படும்.

மூன்றாம் ஆண்டினை, சுவிட்சர்லாந்து அல்லது லண்டனில் படிப்பை தொடரும் வாய்ப்பை அமிர்தா கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூர் பர்மிங்காம் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜூன் பெங், சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமத்தின் தலைவர் பூமிநாதன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமிர்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் பூமிநாதன், மூன்று வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பை சென்னைஸ் அமிர்தா உருவாக்கி தந்துள்ளதாக கூறினார்

#Breaking || Youtube | உலகம் முழுவதும் முடங்கிய Youtube! - ஸ்தம்பித்த பயனர்கள்

CM Stalin | Chennai | Tamilnadu | "சென்னை போலவே பிற மாவட்டங்களிலும்..." - முதல்வர் அறிவிப்பு

BREAKING || தமிழக அரசியலில் வீசும் புயல் - "கூட்டணி..." காங்.யில் இருந்து பறந்த மெசேஜ்

PM Modi | "இன்று முதல் புதிய அத்தியாயம் தொடக்கம்" - உலகையே உற்று நோக்க வைத்த பிரதமர் மோடி பேச்சு

AusvsZim | T20 World cup | Chennai | விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே - வீட்டுக்கு கிளம்பிய ஆஸ்திரேலியா