தமிழ்நாடு

சென்னை'ஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா.. OUM பல்கலைக்கழக தலைவர் பங்கேற்பு

தந்தி டிவி

சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம், மலேசியாவின் OUM பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் 10 ஆயிரம் மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது. இந்நிலையில், சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன், மலேசியாவின் OUM பல்கலைக்கழக தலைவர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். சென்னைஸ் அமிர்தாவின் செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் பட்டயப்படிப்பு பயின்ற 250 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன், மாணவர்களுக்கு சர்வதேச கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், சென்னைஸ் அமிர்தா கல்லூரி மாணவர்கள் மலேசியாவில் படிக்க உள்ளதாகவும், மலேசியவின் OUM பல்கலைக்கழக பேராசிரியர்கள் சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

TN Assembly | ``திமுகவா.. அதிமுகவா..’’ - மாறி மாறி விவாதம்.. பேரவையில் கடும் அமளி

DMK | மீண்டும் `போர் முழக்கத்தை’ கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்- கிடுகிடுக்கும் `இந்திய அரசியல்’

Breaking | Rajya Sabha | குறிக்கப்பட்ட தேர்தல் தேதி | ராஜ்ய சபாவிலும் பங்கு கேட்கும் காங்.?

DMDK | ADMK | ஏற்கெனவே கொடுத்த வாக்கு - அதிமுகவோடு கைகோர்க்குமா தேமுதிக?

DMK Alliance | திமுகவிடம் தொகுதி பங்கீடு கேட்டு அதிரடியில் இறங்கிய இன்னொரு கூட்டணி கட்சி