தமிழ்நாடு

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி - ஆளுநர் பன்வாரிலால், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், 1960களில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு விவசாய புரட்சி மூலம் தீர்வு கண்டவர், எம்.எஸ். சுவாமிநாதன் என புகழாரம் சூட்டினார். விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை மும்பை பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதாக எம்.எஸ் சுவாமிநாதன் அறிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்