தமிழ்நாடு

ஆசையாக வந்த நாய்க்குட்டியை தரையில் வீசிய நபர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

ஆசையாக நெருங்கி வந்த நாய்க்குட்டியை கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தி டிவி
சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த குட்டி நாயை ஒருவர் தன் கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வைத்து ப்ளூ கிராஸ் அமைப்பு சார்பில் மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பாலமுருகன் என்பது தெரியவந்தது. நாய்க்குட்டியை தரையில் அவர் வீசி எறிந்ததை பார்த்த மற்ற நாய்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தன. இந்த காட்சி நாய்களின் ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்