தமிழ்நாடு

தந்தைக்கு ஹார்ட் சர்ஜரி.. 5 லட்சம்டெபாசிட் செய்த கஸ்டம்ஸ் ஆபிசர் -ஷாக்கான தனியார் வங்கி

தந்தி டிவி

சென்னையில் சுங்கத்துறை ஆய்வாளர் வங்கியில் செலுத்திய பணத்தில் 6 கள்ளநோட்டுகள் இருந்த நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புஷ்பந்தரா, சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கிக்கு சென்ற புஷ்பந்தரா தனது மனைவியின் வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். அதில் 6 கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து புஷ்பந்தராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புஷ்பந்தராவின் தந்தைக்கு இருதய அறுவை கிசிக்கை நடைபெற்றுள்ள நிலையில், அதற்கு தேவையான பணத்தை நண்பர்களிடம் பெற்று அவர் வங்கியில் செலுத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

CM Vijay | Ambulance Jeep | ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்த CM விஜய்

EPS | DMK | Aadhav |"EPS உடன் திமுக சேர்ந்து.." - ஒவ்வொரு பாயிண்டிலும் ட்விஸ்ட் வைத்த அமைச்சர் ஆதவ்

CM Vijay ``கரெக்ட்டா டைமுக்கு வரணும்’’ - தலைமை செயலகத்தை ஸ்ட்ரிக்ட்டாக்கிய CM விஜய்

Tirumavalavan | CM Vijay | "திருமாவளவன் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும்"- அமைச்சர் ஆதவ்

Kanchipuram | 2 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட்