தமிழ்நாடு

மின்வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு

தந்தி டிவி

தமிழக மின்வாரிய அலுவலகங்களில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12 மின்வாரிய மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பயோ மெட்ரிக் பதிவேடு முறையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நிதிநிலையை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. களப்பணியில் இருப்பவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை நிறுவுவது எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறைக்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு