தமிழ்நாடு

சென்னையில் ஜிம்முக்குள் பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்த மாஸ்டர் - வீடியோ எடுத்த கள்ளக்காதலி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவக்குமார். ஜிம் ட்ரெய்னரான இவர் திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், இருவரும் கூட்டு சேர்ந்து ஜிம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், உடல் பருமனை குறைப்பதற்காக சிவக்குமார் நடத்தி வந்த ஜிம்மில் இணைந்திருக்கிறார். திருமணமான இப்பெண்ணுடனும் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இதில், இருவரும் ஜிம்முக்குள் தனிமையில் இருந்ததை சிவக்குமாரின் முதல் தகாத உறவு காதலி செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவை உடல் எடையை குறைக்க வந்த பெண்ணுக்கு அனுப்பிய அவர், வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி லட்சக் கணக்கில் பணம் பறித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிவக்குமாரிடம் முறையிட்டும் பலனளிக்காததால் இறுதியில் தன் கணவரிடமே அப்பெண் முறையிட்ட நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், அனைத்தும் திட்டமிட்ட சதி என்றும், தன் காதலியுடன் கூட்டுச் சேர்ந்தே உடல் எடையை குறைக்க வந்த பெண்ணுடன் சிவக்குமார் நெருக்கமாக இருந்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்