தமிழ்நாடு

சென்னைக்கு நடுவே 160 ஏக்கர் பிரமாண்ட இடம் - தமிழகத்தில் புதிய தலைமை செயலகம் உதயம் இங்குதானா?

தந்தி டிவி

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் புதிய பசுமை

தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தமிழக அரசு

பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடம், குத்தகை

அடிப்படையில் சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்டு

இருந்தது. சுமார் 730 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் கூறி, செப்டம்பர் 9ம் தேதி, ரேஸ் கிளப் வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் கிண்டி மைதானம் முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் புதிய பசுமை தலைமைச்செயலகம் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையம், அண்ணா சாலை ஆகியவை இதன் மிக அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் கிண்டி ரேஸ்கோர்ஸ்

இடத்தில் கூட புதிய சட்டமன்றத்தை கட்டுவார் என கடந்த

ஆண்டு அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். 

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்