தமிழ்நாடு

"தீர்த்ததில் மயக்க மருந்து... சிதைத்த சென்னை சாமியார்"- ஆதரத்தை காட்டி பரபரப்பை கிளப்பிய டிவி ஆங்கர்

தந்தி டிவி

தீர்த்ததில் மயக்க மருந்து... சிதைத்த சென்னை சாமியார்" - ஆதரத்தை காட்டி பரபரப்பை கிளப்பிய டிவி ஆங்கர்

கோவில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட டிவி பெண் தொகுப்பாளினி மகளிர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, கோவில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக டிவி பெண் தொகுப்பாளினி அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் அர்ச்சகரை கைது செய்தனர். கடந்த 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியநிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட டிவி பெண் தொகுப்பாளினி வெள்ளிக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி தனக்கு தாலி கட்டியதுடன், குலதெய்வ கோவிலுக்கும் அழைத்து சென்றதாகவும், இந்த வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Gem Veeramani Issue| வீரமணி விவகாரத்தில் அருண் IPS மாற்றப்பட்ட நிலையில் அடுத்த அதிரடி

CM Vijay Campaign | மதுராந்தகத்தில் CM விஜய் பிரசாரம் - கண்டிஷனோடு ரெடியான ஸ்பாட்..

DMK | DVAC Raid| குறிவைக்கப்பட்ட திமுக எம்பி - அதிரடியாக உள்ளே நுழைந்த DVAC அதிகாரிகள்

#BREAKING || Today Gold Rate | ஏறிய தங்கம் விலை - இவ்ளோ தானா?

BREAKING || "பள்ளிகளில் காலை உணவை.." - கண்டிஷனாக சொன்ன பள்ளி கல்வித்துறை