சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற போது அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்பவர் பிடிபட்டார். தங்கள் நாட்டில் சேட்டிலைட் போனுக்கு எந்த தடையும் இல்லை என்பதால் எடுத்து வந்ததாக அவர் விளக்கமளித்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாத சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.