தமிழ்நாடு

1000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது

ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தேன்ராஜ் என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 350 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்பத்தூர் ராமாபுரம் பெரியார் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தேன்ராஜ், அப்பாஸ், சூரியபிரகாசம், கோபால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்