தமிழகத்தில் நேற்று `டெண்டர்’ ஓட்டு போட்ட சென்னை பெண் - வாக்கு எண்ணும்போது முடிவு தெரியும் #tnelection2026 #tendervote தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் டெண்டர் ஓட்டை பதிவு செய்த பெண் சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்ட பெண், டெண்டர் ஓட்டு முறையில் வாக்களித்தார். கோபாலபுரம் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு அம்லு என்ற பெண் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரது வாக்கை ஏற்கனவே வேறு யாரோ செலுத்திவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டார். வாக்குச்சாவடியில் இருந்த அதிமுக, தவெக முகவர்களும் தேர்தல் அலுவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அம்லு என்ற பெண்ணுக்கு டெண்டர் ஓட்டு முறையில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த முறையில் வாக்கானது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்யப்படாது... அதற்கு பதிலாக வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகள் நெருக்கமாக இருந்தால் இந்த ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.