தமிழ்நாடு

Chennai | Whistle Protest | விசில் ஊதி நூதன போராட்டம் | கோரிக்கைகளுடன் திரண்ட மாற்றுத்திறனாளிகள்

விசில் ஊதி நூதன போராட்டம்

thanthitv

Chennai | Whistle Protest | விசில் ஊதி நூதன போராட்டம் | கோரிக்கைகளுடன் சென்னையில் திரண்ட மாற்றுத்திறனாளிகள் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் விசில் ஊதி நூதன போராட்டம் உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வலியுறுத்தல் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கோரிக்கை 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் விசில் ஊதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்திற்குப் பின் பேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கரன், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளார்.

BREAKING || "இனி பள்ளிகளில் இதெல்லாம் கூடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

BREAKING || கரூர் சம்பவம் அரசு வேலையை எதிர்த்த வழக்குகள் - நாளை விசாரணை

Pooja Hegde | JanaNayagan | CMVijay | CM விஜய்யின்.. ஜனநாயகனுக்கு `A' கொடுத்த சென்சார்

Breaking | Ali Khamenei | இதுவரை வெளியே வராத மகன் | காமேனியின் இறுதி சடங்கு உலகுக்கு சொல்லும் செய்தி

BREAKING || "வணக்கம் மெல்போர்ன்..." முதலில் தமிழில் ஆரம்பித்து இரண்டாவதாக ஹிந்தியில் பேசிய பிரதமர்