தமிழ்நாடு

"சென்னைக்கு குடிநீர் பிரச்சினை வராது" - குடிநீர் வடிகால் வாரியம்

சென்னையில் கோடையை சமாளிக்கும் அளவுக்கு ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாக, குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் கோடை காலத்தில், நீரின் தேவை பூர்த்தியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கோடையை சமாளிக்க முடியுமா? என்பதே பலரது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பராம்பாக்கம் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நான்கு ஏரிகளிலும் ஆயிரத்து 417 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது 5 ஆயிரத்து131 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்