சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வாட்டர் எக்ஸ்போ விறுவிறுப்பாக தொடங்கியது... வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பாதுகாப்பான குடிநீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான ஆர்.ஓ. பிளான்ட் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 225 அரங்குகள் உள்ளன... தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த 3 நாள் கண்காட்சி, பொதுமக்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஏற்பாட்டாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.