தமிழ்நாடு

நாளை விசாகா கமிட்டியின் முதல் கூட்டம்: காவல்துறை பெண்களின் பாலியல் புகார் குறித்து விசாரணை

காவல்துறையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.

தந்தி டிவி

காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்த புகார்களை விசாரிக்க, கூடுதல் காவல்துறை இயக்குநர்​ சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

உறுப்பினர்களாக கூடுதல் காவல் துறை இயக்குனர் அருணாச்சலம், காவல்துறை துணை தலைவர் தேன்மொழி உட்பட 5 பேர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. பட்டினப்பாக்கத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும், பெண் எஸ்பி புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

BREAKING | பரபரக்கும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் - மதுராந்தகத்தில் இறங்கிய அதிகாரிகள்

Brics | ஒன்று கூடிய உலகின் பெரும் தலைகள் - தலைப்புச் செய்தியாக மாறும் குரூப் போட்டோ

Modi | Putin | ஒரே காரில் வந்திறங்கிய மோடி, புதின்... தொழில் கண்காட்சியை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்

Ajith Kumar | AK | லண்டனில் இருந்து வெளியான அஜித் வீடியோ.. SMல் இதான் ட்ரெண்டிங்

டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றம் - ஐகோர்ட்டில் சொன்ன தமிழக அரசு