புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் - பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகள சென்னை கொருக்குப்பேட்டையில் முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தின், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர் ரயில்வே பகுதியில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே சிதையத் தொடங்கியுள்ளது. மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் திடீரென சாலையில் பெயர்ந்து விழுந்ததால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் அதிஷ்டவசமாக யார் மீதும் சிமெண்ட் பூச்சுகள் விழாததால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.