காவல் அதிகாரிகள் வீடுகளில் சோதனை :
மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முன்பு திருப்போரூர் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்புராஜ், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎஸ்பி, ஏ.டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.