தமிழ்நாடு

இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

தந்தி டிவி

                                     இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

• வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது தங்கையின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் புகாரளித்துள்ளார். • சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஶ்ரீரங்கமாள் தெருவில் வசித்து வரும் பிரகாஷ், 8 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து, கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டார். • கடந்த 16-ம் தேதி, தனது தாயை செல்போனில் தொடர்புகொண்ட கவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். • தொடர்ந்து தூக்கிட்டு கவிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது தங்கை இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகாரளித்துள்ளார். • மேலும், கவிதாவின் கணவர் பிரகாஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட தனது தங்கையை அவர் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். • இதனையடுத்து, தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை