தமிழ்நாடு

சென்னை : பாதசாரிகள் மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்து

சென்னை கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி
சென்னை கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுபோதையில், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவந்த மர்ம நபர் ஒருவர், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 12 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்