தமிழகத்தை கலங்கடித்த மரணங்கள்.. 5 பேருமே விஜய் கட்சி.. விஜய்க்கு சென்ற மரண சேதி
சென்னை எழும்பூர் நேரு பூங்கா அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த நிலையில்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் குமார் அஞ்சலி செலுத்தினார். இறந்த இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த இழப்பு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமில்லாது கட்சிக்கும் பேரிழப்பு என தெரிவித்த அவர், அவர்களது குடும்பங்களுக்கு வேண்டிய உதவியை கட்சி நிச்சயம் செய்யும் எனவும் உறுதியளித்தார்.