தமிழ்நாடு

சென்னை பூசாரி கொடுத்த தீர்த்தம்...அடுத்த நொடி மயங்கிய டிவி ஆங்கருக்கு நடந்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை பூசாரி கொடுத்த தீர்த்தம்...அடுத்த நொடி மயங்கிய டிவி ஆங்கருக்கு நடந்த சம்பவம்

சென்னையில், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவில் பூசாரி மீது பெண் தொகுப்பாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டிவி தொகுப்பாளினி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி அவர் சென்ற போது, அங்கு குருக்களாக இருந்த கார்த்திக் முனுசாமி அறிமுகமாகியுள்ளார். அவரது வீட்டுக்கு சென்றபோது பூசாரி கொடுத்த தீர்த்த‌த்தை குடித்த‌தும் மயங்கிய தொகுப்பாளினியை, பாலியல் வன்கொடுமை செய்த‌தாக கூறப்படுகிறது. அதன்பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி கர்ப்பத்தை கலைத்துவிட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. கார்த்திக் முனுசாமியின் செல்போனில் பல பெண்களை ஆபாசமாக படங்கள் எடுத்து வைத்திருப்பது தெரிந்து கொண்ட‌தால், தொகுப்பாளினியை தாக்கி துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக புகார் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பூசாரி கார்த்திக் முனுசாமியை தேடி வருகின்றனர்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு