சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோடை கால மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சுசுகி நிறுவனம் தயாரித்துள்ள இந்த இருசக்கர வாகனத்தில் சைரன், ஒலிப்பெருக்கி, தலைக்கவசத்துடன் கூடிய மைக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு, ஸ்மார்ட் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.